உலகை மாற்றக்கூடிய வழிகள் 25

மாற்றம் ஒரே நேரத்தில் நிகழக் கூடியதல்ல, அது சாத்தியமும் அல்ல. மாற்றம் என்பது ஒவ்வொருவரிடம் இருந்தும் வெளிப்பட்டு பலரால் பின்பற்றப்பட்டு ஒருங்கிணைந்து செயல்படும் பொழுதே அது நிகழ்கிறது. ஆகவே நாம் ஒவ்வொருவரும் நம்மில் இருந்து தொடங்குவோம் அதன்படி பின்பற்றுவோம் மாற்றத்தை ஏற்படுத்துவோம். உறுதியாக.
 1. அழுகின்றவர்களுக்கு தோல் கொடுங்கள்.
 2. உங்கள் பழைய நல்ல துணிகளை சுத்தம் செய்து இயலாதவர்களுக்கு தானமளியுங்கள்.
 3. இரத்தம் தானமளியுங்கள்
 4. வாழ்கையின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழுங்கள்.
 5. தினமும் துணிச்சலான ஒரு செயலை செய்யுங்கள்.
 6. அனைவரிடமும் ஏற்றத் தாழ்வு பார்க்காமல் சரி சமமாக பழகுங்கள்.
 7. உங்கள் சுற்றத்தார்களை உற்சாகப்படுத்துங்கள், அவர்களை தட்டிக் கொடுங்கள்.
 8. யாரையும் பார்க்கும் பொழுது கண்களால் சிறிது புன்னகை பூத்திடுங்கள்.
 9. உங்கள் வாழ்க்கை அகராதியில் இருந்து பிடிக்காது, முடியாது, என்ற வார்த்தையை அழித்து விடுங்கள்.
 10. உங்கள் திறமைகளை மற்றவர்களோடு பகிர்ந்துக்கொள்ளுங்கள்.
 11. உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு துரோகம் செய்தவர்களை மனப்பூர்வமாக மன்னியுங்கள். மேலும் அவர்களுக்காக பிராதித்துக்கொள்ளுங்கள்.
 12. வயதானவர்களுக்கு, இயலாதவர்களுக்கு உங்கள் இருக்கையை விட்டுக்கொடுங்கள்.
 13. நல்ல செய்திகளை உலகிற்கு உரக்க சொல்லூங்கள்.
 14. நீண்ட நாளைய நண்பனை கண்டவுடன் அவர்களை தளுவிக்கொள்ளுங்கள், அவர்கள் முதுகில் தட்டிக் கொடுங்கள்.
 15.  உங்களை இதயப்பூர்வமாக, ஆத்மப்பூர்வமாக ஆழமாக நம்புங்கள், பின்னர் உலகம் உங்களை நிச்சயம் கண்டுக்கொள்ளும் மேலான அங்கீகாரத்தை கொடுக்கும் என்பதை மறக்காதீர்கள்.
 16.  கோபம், பொறாமை கொள்ளாதீர்கள்.
 17. தொல்வியுற்றவர்களுக்கு ஆறுதலாய் இருங்கள்.
 18. நூலகங்களுக்கு உங்களால் முடிந்த புத்தகங்களை பரிசளியுங்கள், இயலாதவர்கள் அதனால் பயனடைவார்கள்.
 19. மரங்கள், பூச்செடிகளை நடுங்கள்.
 20. மக்களையும் அவர்களின் போக்கையும் விரும்புங்கள், அவர்கள் என்னதான் ஊமையாய் இருந்தாலும், ஒன்றுப்படாமல் இருந்தாலும் சரி காலம் அதற்கான சந்தர்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதை மறக்காதீர்கள்.
 21. ஜாதி, மதம், இனம் பாகுபாடு பார்க்காமல் பழகிடுங்கள், அவ்வாறு உங்கள் சுற்றத்தார் இருப்பின் ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருக்கிறார்கள் என்றெண்ணி விலகிவிடுங்கள்.
 22. தெருவில் அனாதையாய் திரியும் குட்டி நாய்களுள் ஒன்றினை தேர்ந்தெடுத்து அதனை வளர்த்திடுங்கள் (இருக்கும் காலம் வரை உங்களுக்கு நன்றியுடன் இருக்கும்).
 23. நீங்கள் இவ்வுலகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அவ்வாறே அதனை காணுங்கள், உங்களால் மற்றவர்களும் மாறுவார்கள் உலகமும் தன்னை நிச்சயம் மாற்றிக்கொள்ளும் அல்லது மாற்றத்தை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கும்.
Advertisements

ராபின் ஷர்மா கூறும் ஐந்து தினசரி கடமைகள்.

கனடா நாட்டில் பிறந்து, இன்று உலகறிந்த தன்முன்னேற்றச் சிந்தனையாளராய், எழுத்தாளராய் விளங்குபவர் ராபின்ஷர்மா. இவர் எழுதிய THE MONK WHO SOLD HIS FERRARI  என்ற புத்தகம் கிட்டத்தட்ட ஒரு கோடி பிரதிகளையும் தாண்டி விற்பனையாகிக்கொண்டிருக்கிறது. அவர் கூறும் சில தினசரி கடமைகள் கீழே.

01. ஒவ்வொரு நாளும் காலையில் 5:00 A.M மணிக்கு எழுந்திருங்கள். விடியற்காலையில் எழுந்திருப்பவர்கள் வாழ்கையில் சிறப்பானவற்றை பெறுவார்கள்

02. அன்றாடம் முதல் அறுபது நிமிடங்களை தனியாக ஒதுக்குங்கள்.அந்நேரத்தை வழிபாடு, தியானம், நாட்குறிப்பு எழுத, வாழ்க்கை நிலையை சிந்தித்து பார்க்க இவை சிறந்த வாழ்க்கை அமைவதற்கு உதவும்.
03. எல்லையில்லா அன்பு, கருணை, குணநலன் ஆகியவற்றை வெளிக்காட்ட முயலுங்கள் அவ்வாறு செய்யும்பொழுது, ஒரு புதிய உலகை உருவாக்குவதில் உங்கள் பங்கை செய்கிறீர்கள்.

04. உங்கள் வேளையில் சிறந்த உயர்ச்சியை காட்டுங்கள், அபரிமிதம், மற்றும் பூர்த்தி செய்தல் ஆகியவை உங்களிடம் தாமாக வரும்.

05. உங்களுக்கு தெரிந்த மிகவும் விரும்பத்தக்க மனிதராகுங்கள் இந்த உலகத்தில் வாழும் மிகப்பெரிய மனிதர்களுள் நீங்களும் ஒருவர் என்று உணர்ந்து செயல்பட்டால் உங்கள் வாழ்க்கை முன்புபோல் இருக்காது, நீங்கள் பல உயிர்களை வாழ்த்துவீர்கள்.

புதியதாய் வாழ்வது எப்படி

யாராலும் பின்னோக்கி சென்று புதிய வாழ்கையை தொடங்க முடியாது. ஆனால் யார் நினைத்தாலும் இன்று தொடங்கி நாளை ஒரு புதிய வாழ்கையை அமைத்துக்கொள்ள முடியும். நாம் புதியதாய் வாழ சில வழிமுறைகள் கீழே.

01.பழைய நினைவுகளிலிருந்து விடுபடுங்கள்
பழையன கழிதலும், புதியன புகுதலும் தான் வாழ்க்கை ஆகையால் மீண்டும் பழையவற்றினை நினைத்து அதற்கு உயிர் கொடுக்காதீர்கள்.

02. வாழ்க்கை பாடத்தை கற்று கொள்ளுங்கள்
நம் வாழ்வில் நடப்பவை அனைத்துமே நமக்கு ஒரு பாடத்தை போதிக்கின்றன, நீங்கள் பழகிய, சந்தித்த, எதிர்நோக்கிய விஷயங்கள் அனைத்தும் உங்கள் வாழ்வின் நீங்கள் சந்தித்த வாழ்க்கை பாடங்களே. அதில் நீங்கள் நிறைய ஏமாற்றங்களும், ஏற்றங்களும் சந்தித்து இருக்கலாம். அவற்றில் நல்லனவற்றை மைல்கல்லாக எடுத்துக்கொண்டு. தீயவற்றினை அனுபவமாக ஏற்று கொள்ளுங்கள்.

03. எதிர்மறை எண்ணங்களை கைவிடுங்கள்.
எதிர்மறை எண்ணங்கள் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்,
நேர்மறை எண்ணங்கள் நேர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். ஆகையால் எப்போதும் நேர்மறையாக சிந்திக்கவும் நினைக்கவும் பழகிக் கொள்ளுங்கள், அது உங்களை மட்டும் அல்லாது உங்களை சார்ந்தவர்களையும் உயர்ந்தவர்களாகும்.

04.பொறுப்பேற்று கொள்ளுங்கள்

உங்கள் வாழ்வில் ஏற்றம் ஏற்பட்டாலும் சரி அல்லது  இறக்கம் ஏற்பட்டாலும் சரி அதற்கு முழு பொறுப்பாளர் நீங்களே , எந்த ஒரு விஷயமும் உங்களை மீறி நடைப்பெறாது. அவ்வாறு நடைப்பெற்றால் அதற்கு உங்கள் கவனமின்மையே காரணமேயன்றி வேறு யாரும் அல்லர்.

௦5.எதற்காக வாழ்கிறீர்கள் என்பதனை கண்டறியுங்கள்.
வாழ்க்கை பந்தயத்தில் எதற்காக ஓடுகிறோம் என்பதனை அறிந்து கொண்டு ஓடுங்கள். சிலர் சிறந்த இசையமைப்பாளர் ஆவதற்கும், தொழிலதிபர் ஆவதற்கும் ஓடுகின்றனர், நீங்கள் எந்த இலக்கை நோக்கி ஓடுகின்றீர்கள் என்பதை தெரிந்து கொண்டு ஓடுங்கள்.

06. தேவையில்லாவற்றை ஒதுக்குங்கள்
நீங்கள் என்னவாக போகின்றீர்கள் என்பதை உணர்ந்து அதற்கு உங்களை தயார்படுத்தி அதற்கான சந்தர்பங்களை உருவாக்கிக்கொள்ளுங்கள், தேவையில்லாவற்றினை அறவே ஒதுக்கிவிடுங்கள்.

07. எப்பொழுதும் யதார்த்தமாய் இருங்கள்.
ஒரு செயலையோ, விஷயத்தையோ கடினமாகவும், கண்மூடித்தனமாகவும் பின்பற்றாதீர்கள், யதார்த்தமாய் அதனை உங்கள் வழியில் பழக்கிக்கொள்ளுங்கள், இப்படி செய்வதன் மூலம் ஒரு செயலை நாம் செம்மையாகவும் முழுமையாகவும்  கற்றுக்கொள்ளவும், செயல்படுத்தவும் முடியும்.


08. திட்டமிடுங்கள்
நாள் அட்டவணை ஒன்றை உருவாக்கி அதில் நீங்கள் எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும், எதை முடிக்க வேண்டும் என்பதனை எழுதி அதன்படி அதனை செம்மையாய் பின்பற்றுங்கள், அது உங்கள் பொன்னான நேரத்தை மிச்சப்படுத்தவும், உங்கள் இலக்கினை சீராக அடையவும் உதவும்.

o9. சுற்றத்தாரை கவர எண்ணாதீர்கள்.
அது உங்கள் நேரத்தை வீணடிக்கும் செயலாகும், நீங்கள் மற்றவர்களுக்கு முன்னோடியாய் இருங்கள் அதுவே அவர்களை கவரும், மாறாக நீங்கள் அவர்களை கவர எண்ணினால் பின்னர் அவர்களை கவரவே சிந்திக்கவும், செயல்படவும் தோன்றும்.

10. பெரிதாய் சிந்தியுங்கள்.
சிறிதாய் சிந்திப்பதை போலத்தான் பெரிதாய் சிந்திப்பதும், அதற்கு நாம் சற்று கூடுதலாக உழைக்க வேண்டும் அவ்வளவே, ஆகையால் எதனையும் பெரிதாய் சிந்தித்து உறுதியாய் செயல்படுங்கள். வெற்றி உறுதி.

குறிப்பு: இது என்னுடைய முதல் தமிழ் படைப்பாகும், கமெண்ட் கொடுப்பதன் மூலம் என் படைப்பு உங்களை சேர்ந்ததா இல்லையா என்பதை என்னால் அறிந்து கொள்ள முடியும், ஆகையால் கமெண்ட் செய்யுங்கள்.