எக்சொடெல் – நவீன இந்திய வணிகத்திற்கான மேகத் தொலைபேசி தளம்

ஒரு தொலைபேசி அழைப்பு அல்லது குறுந்தகவல் வழியாக வரும் வணிகத்தை தங்கள் வாடிக்கையாளர் தவறவிடாத வண்ணம் பார்த்துக்கொள்வதை கடமையாகக்கொண்டு செயல்படும் எக்சோடெல் நிறுவனமானது கர்நாடகாவை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு, குஜராத், ஆந்திரா, டெல்லி மற்றும் மும்பை மாநிலங்களில் தன் முதன்மையான சேவையை வழங்கிக்கொண்டு வருகின்றது.

Exotel_Banner

எக்சொடெல் என்பது நவீன இந்திய வணிகத்திற்கான மேகத் தொலைபேசி தளமாகும் (CLOUD TELEPHONY SYTEM) இவ்வசதியால் நாம் ஒரே நேரத்தில் பல தொலைப்பேசி அழைப்புகளையும் மற்றும் நூற்றுக்கணக்கான குறுந்தகவல்களையும் பெறவும்/அனுப்பவும் முடியும். இவையனைத்தும் EPABX/PRI இணைப்பில்லாமல் செயல்படுத்த முடியும். அதுமட்டுமல்லாது. இந்நிறுவனம் வழங்கும் டேஷ்போர்டின் (DASHBOARD) மூலம் உங்கள் நிறுவனத்தின் விற்பனை, மார்க்கெட்டிங் மற்றும் வாடிக்கையாளர் சேவை போன்ற விஷயங்களை எக்சொடெல் வழங்கும் APPS தொகுப்பின் மூலம் நிர்வகிக்கவும் முடியும். Continue reading

Advertisements

சானல் 4 வெளியிட்ட போர்குற்ற ஆவணப்படம்

நம் தமிழக மக்கள் பெரும்பாலானவர்களுக்கு இலங்கையில் போர் நடந்தது என்பது தெரியும், பலரை சுட்டு கொன்று விட்டனர் என்பதும் தெரியும் ஆனால் அங்கே நடந்துள்ள, மறைக்கப்பட்டுள்ள கொடூரங்கள், மனித உரிமை மீறல்கள், வன்கொடுமைகள் போன்றவை பல மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனை பற்றி நமது ஊடகங்களும் மக்களுக்கு தெரியா வண்ணம் மறைத்துவிட்டன அவ்வாறு தெரியப்படுத்தினாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களை சென்றடையும் வண்ணம் செய்திகளை வெளியிடவில்லை.

இருப்பினும் சில ஊடகங்கள் விளம்பரத்திற்கும், அரசியல் ஆதாயதிற்கும் சில கானோளிகளையும், படங்களையும் வெளியிட்டன. ஆனால் சானல்4 என்னும் தொலைக்காட்சி அதனை பற்றிய குறும்படத்தை வெளியிட்டு இலங்கையில் அரேங்கேரிய படும்பாதக செயல்களை உலகறிய செய்தது. பலநாடுகள் அந்நாட்டில் நடந்த வக்கிரங்களுக்கு எதிராக கூக்குரலிட தொடங்கிவிட்டன. ஆனால் முக்கிய அங்கமாக பாதிக்கபட்டிருக்கும் நம் இனத்தை நாமே கண்டுக்கொள்ளாமல் இருப்பது, நாம் அவர்களுக்கு இழைக்கும் துரோகம் ஆகும். ஐ.நா வரை சென்றும் நிலைமை புரியாமல் நாம் அமைதி காப்பது என்பது முறையான வழிமுறையாக தெரியவில்லை.

இக்குறும்படத்தில் சுட்டிக்காட்டப்படும் விடயங்கள், சம்பவங்கள், சிங்களர்கள் இறந்த தமிழர், தமிழச்சிகளை பார்த்து அவர்களுக்கு எதிராக அவர்கள் உச்சரிக்கும் சொல்லன்னா வார்த்தைகள், அவர்களால் நம் தமிழர்கள் சித்திரவதைக்கு உள்ளாகும் காட்சிகள் போன்றவை பார்ப்பவர்களின் மனதிலும், அடி வயிற்றிலும் ஒரு அதிர்வலையை ஏற்படுத்துகிறது. இன்னும் பல புகைப்படங்கள், காணொளிகள் பல வலைதளங்களில் காணக் கிடைக்கின்றன, அவற்றை காண மனவலிமை நிச்சயம் தேவை. ITS ABOUT EXECUTION OF TAMILS என்று இக்குறும்படம் மிகத்தெளிவாக விவரிக்கிறது.

படத்தின் இறுதிக்காட்சிகளில் சிறை பிடிக்கப்பட்ட புலிகள் கொடூரமாக கொல்லப்படும் காட்சிகள் காட்டப்படுகின்றது. கைகளும், கண்களும் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக உட்கார வைத்து அரட்டை அடித்தவாறே சுட்டுக் கொல்கிறார்கள். பெண் போராளிகளை நிர்வாணப்படுத்தி பாலியல் வன்முறை செய்து கொல்கிறார்கள். காலால் பெண்ணுறுப்புகளை எட்டி உதைக்கிறார்கள். நிர்வாணமான பெண்ணுடல்களை நிர்வாணமாக நாதியற்ற நிலையில் டிரக்கில் ஏற்றும் போது “இதுதான் நல்ல ஃபிகர்” என்று கூறி மகிழ்கிறார்கள். இலங்கையின் அரங்கேற்றப்பட்ட அவலம் நாம் நினைத்ததை விட மிகவும் மோசமானதாக இருக்குமென்பது மட்டும் உறுதி. இப்படத்தினை பார்க்கும் பொழுது உங்களுக்கு நிச்சயம் புரியும்.

இந்த ஆவணப்படம் வெளியாவது குறித்து பெரும் பணத்தை செலவு செய்து பிரிட்டன் நாளிதழ்களில் விளம்பரமாகத் தந்தது சேனல் 4 என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 70 ஆயிரம் தமிழர் குறுகிய காலகட்டத்தில் கொல்லப்பட்ட ஒரு கொடிய நிகழ்வை முழுதாக மறந்து அல்லது மறைத்து எப்படி இந்த உலகத்தால் இயங்க முடிகிறது?

“KILL EVERYBODY AND FINISH THE WAR” அனைவரையும் கொன்றொழித்துவிடுங்கள் போரினை முடியுங்கள் என்ற ரீதியில் முடிக்கப்பட்டுள்ள இப்போரானது. LTTE க்கு எதிராக நடைபெற்ற போர் என்ற பெயரில் அங்கு வாழும் தமிழக மக்களுக்கு எதிராகவும் அரங்கேற்றப்பற்ற ஒரு இனவழிப்பு போராகவே இது கருதப்படுகிறது. இன்றும் அங்கு நம் தமிழன் தமிழச்சிகள் சந்தேகம் என்ற பெயரில் கைது செய்து பல பாலியல் வல்லூருக்கு ஆளாக்கி கொன்றும் வருகின்றனர்.

உதாரணத்திற்கு இக்குறும்படத்தில் வரும் ஒரு காட்சி அதை ஒரு பெண்ணே வேறு வார்த்தைகளில் கூறுகிறார். பிணங்களையே வதைக்கக்கூடிய அந்த மிருகங்கள் உயிருடன் இருப்போரை என்ன செய்திருக்குமென்பது புரியாத விடயமல்ல என்பதுதான் அது.

இதனை நான் பதிவாக போடுவதற்கு காரணம், இன்று நம் இனத்திற்காக போராடாத நாம், நாளை நாமும் பாதிக்கப்படும் பொழுது கேட்க நாதியற்ற ஓர் இனமாய் இருப்போமா என்றே எண்ணத் தோன்றுகிறது.

உதாரணம்:

➤ மீனவர்கள் இலங்கையினரால் சுட்டுக்கொலை செய்யப்படுவது.

➤ கேரளத்தில் தமிழர்க்கு எதிராக நடைபெற்ற அணை பிரச்சனையில் உச்சநீதிமன்றம் கூறியும் கேரளாவினர் தமிழர்களையும், தமிழச்சிகளையும் மானபங்கப்படுத்தி அடித்து விரட்டியது.

➤ தமிழகத்தில் கூடங்குளம் ஆபத்து எனத் தெரிந்தும் தமிழகத்தில் திணிப்பது (நாளை பாதகம் ஏதேனும் ஏற்பட்டால் (போபால் நிலையே ஏற்படும் என்பது உறுதி (இன்றும் போபாலில் பலர் ஊனமாகவும், உடலுறுப்பு இன்றியும் பிறக்கின்றனர், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடாக 2300 ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டது),

➤ மின்சாரத் தேவையில் மத்திய அரசு தமிழகத்தை கண்டுகொள்ளாதது.

இவையனைத்தும் நம் இனத்திற்கு சுற்றப்படும் ஒரு வலையாகும். நாளை நாம் என்னதான் கதறினாலும் யாரும் கண்டுகொள்ளாத நிலை வரும் ஏன் உலகமே செவிமடுக்காது இருக்கலாம் இது வெறும் வியூகம் தான் ஒருவேளை வரும்நிலை ஏற்பட்டால்.

ஒரே ஒரு முறை நம்மை இவ்வுலகில் நாம் யாரென நிருபித்துவிடவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறோம். அல்லது நாளை கேட்பாரற்ற, கேட்க நாதியற்ற நிலையில் நாம் இருக்க மாட்டோம் நம் சந்ததியினர் இருப்பர். நம் பக்கத்து நாட்டில் நமக்கெதிராக நடைபெற்ற இவ்வக்கிரமங்களை அறிந்துகொள்ளாமல், கண்டுக்கொள்ளாமல் இருப்பது நமது அறியாமையை பறைசாற்றுகிறது. இக்கொடுமைக்கு ஆக்கபூர்வமாக ஒரு முடிவெடுப்பது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.

ஹிட்டன் கேமராவில் இருந்து தப்பிப்பது எப்படி

இப்போதெல்லாம் இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் ஹிட்டன் கேமரா மூலம் நமது அந்தரங்கத்தை விலைப்பேசி விடுகின்றனர், குறிப்பாக பெண்களே இதனால் பாதிக்கப்படுகின்றனர். இந்த ஹிட்டன் கேமராக்கள் பெரும்பாலும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் வடிவங்களிலேயே கிடைப்பதால் கண்டுபிடிப்பது என்பது சற்று கடினமான காரியமாகவே உள்ளது.


இவை பெரும்பாலும் கீழ்வரும் வடிவங்களில் விற்கப்படுகின்றன:

தமிழில்:
பேனாக்கள், பிளக் பாயிண்டுகள், சுவிட்ச் ஸ்க்ருகள், பென் டிரைவ்கள், சுவர் கடிகாரங்கள், கை கடிகாரங்கள், கதவின் சாவி துவாரங்கள், கண்ணாடிகளில், சாவிகொத்துக்களில் என இன்னும் பல வடிவங்களில் கிடைக்கிறது.

ஆங்கிலத்தில்:
PENS, PLUG POINTS, SWITCH SCREWS, PEN DRIVE, WALL CLOCK, TABLE CLOCK, DOORS’ KEY HOLE, IN.SIDE OF THE MIRROR, WRIST WATCHES, KEYCHAIN

பெரும்பாலானவர்கள் ட்ரயல் (உடை மாற்றும்) ரூமில் மட்டுமே ஹிட்டன் கேம் வைத்து நம் அந்தரங்கத்தை நமக்கு தெரியாமல் எடுப்பதாக கருதுகின்றனர் ஆனால் இவை ஆஸ்பத்திரிகள், மசாஜ் அறைகள், கல்லூரிகள், ஹோட்டல் அறைகள், கல்யாண மகால்கள், லாட்ஜ்கள், தியேட்டர்கள், பொது கழிப்பிடங்கள் என நமக்கு தெரியாத இடங்களிலும் வைத்துள்ளனர் அதற்கு வெளிவரும் ஸ்காண்டல்களே (SCANDALS) சாட்சி.

நமக்கு தெரியாமலே நம்முடைய SCANDALS களும் உலா வருவதற்கான சாத்தியக்கூறு உள்ளது. எச்சரிக்கையாய், விழிப்புணர்வுடன் இருத்தல் மிகவும் அவசியம்.

பெரும்பாலான பஜார் கடைகள், உடை மாற்றும் அறைகள், ஹோட்டல்களில் TWO WAY MIRROR பதிக்கப்பட்டிருக்கும் இதன் சிறப்பம்சம் நீங்கள் உடை மாற்றும் இடத்தில் இருந்து பார்த்தால் வெறும் கண்ணாடியாக மட்டுமே தெரியும் ஆனால் அதன் உள்ளிருந்து பார்த்தால் நீங்கள் மாற்றும் அறையினையும் உங்களையும் தெளிவாய் அப்படியே காணலாம் TWO WAY MIRROR.ஐ கண்டுபிடிக்க ஒரு வழியுள்ளது அவை கீழே.

மறைக்கப்பட்டுள்ள கேமராவை கண்டுபிடிக்க:
01. உங்கள் விரல் நுனியை கண்ணாடியின் மேல் வைக்கவும் இப்போது உங்கள் விரல் நுனிக்கும் விரல் பிம்பதிற்கும் சிறு இடைவெளி இருந்தால் அது உண்மையான கண்ணாடி. அவ்வாறில்லாமல் .நேரிடையாக தொடுவதுபோல் இருந்தால் யாரோ நம்மை கவனிக்கின்றனர் என்று உஷாராகிகொள்ளலாம்.

02. உங்கள் மொபைலை எடுத்து யாரையாவது தொடர்புக்கொள்ளுங்கள் எந்த தொல்லையும் இன்றி நீங்கள் அழைப்பவரை தொடர்புகொள்ள முடிந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. அவ்வாறு தொடர்புகொள்வதில் பிரச்சினை ஏற்பட்டால் உஷாராகிக்கொள்ளுங்கள்.

ஆகவே நாம் குறிப்பாக பெண்கள் எங்கு சென்றாலும் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருத்தல் நலம். இப்பதிவை பலர் ஆங்கிலத்தில் படித்திருக்கலாம் இருப்பினும் சிலர் பயன்பெற தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்.

பாரதியார் வாழ்க்கைக் குறிப்பு

சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி, ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.

தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே.சு. ஐயர், சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்.

தமிழ், தமிழர் நலன், இந்தியா விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டயபுரம் சமஸ்தானத்தால் வழங்கப்பட்டது.

வாழ்க்கைக் குறிப்பு 1882-ம் ஆண்டு எட்டயபுரத்தில் பிறந்த பாரதி தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்படும் நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொள்கின்றார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசி செல்கின்றார். 1898 முதல் 1902 வரை காசியில் தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னனால் அழைத்து வரப்பட்டு காசி அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். இவ்வாறு ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்த பாரதி 1904 ஆம் ஆண்டு மதுரையில் அவர் எழுதும் பாடல் ‘விவேகபானு’ இதழில் வெளியாகின்றது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

சுப்பிரமணிய பாரதியார் தமிழ், இந்தி, சமஸ்கிருதம்” மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.