ஒன்றுக்கு மேற்பட்ட CHAT கணக்குகளை இணைக்க

நாம் கணினியில் உற்றாருடன் உரையாட பல MESSENGERகளை நம் கணினியில் பதிந்திருப்போம் குறிப்பாக யாஹூ அக்கௌன்ட் வைத்திருக்கும் நண்பருடன் உரையாட யாஹூ மெசன்ஜரையும், கூகிளில் உள்ளவர்களோடு உரையாட கூகிள் டால்க்கினையும் பதிந்திருப்போம். இவ்வாறு ஒவ்வொருவருடன் உரையாட ஒவ்வொரு MESSENGERகளை பதிந்திருப்போம் இதனால் நம் கணினியின் நினைவகம் நிறைவதோடு மட்டுமல்லாது நாம் கணினியில் வேலை செய்யும் பொழுது அதன் செயல்திறனும் இம்மென்பொருள்களால் பாதிக்கப்படும்.

ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட CHAT கணக்குகளை இணைக்கவும் மற்றவர்களோடு உரையாடவும் ஒரு மென்பொருள் உள்ளது அதுதான் பிட்கின். இம்மென்பொருள் ஆதரவு அளிக்கும் நெட்வொர்க்குகள்:

AIM
BONJOUR
GADU-GADU
GOOGLE TALK
GROUPWISE
ICQ
IRC
MSN
MXIT
MYSPACEIM
SILC
SIMPLE
SAMETIME
XMPP
YAHOO!
ZEPHYR

இதனால் பல நெட்வொர்க்குகளில் உள்ள நண்பர்களுடன் இம்மென்பொருளை கொண்டு ஒரே இடத்தில் உரையாடலாம்.

பதிவிறக்கம் செய்ய: CLICK HERE
வலைதளத்திற்கு செல்ல CLICK HERE

Advertisements

மைக்ரோசாப்ட் NOTEPAD ஐ டைரியாக உபயோகிக்க

மைக்ரோசாப்ட் NOTEPADஐ வைத்து நாம் பல விளையாட்டுகளை நம் கணினியில் விளையாடலாம் அவற்றில் மிகவும் சுவாரசியமானது NOTEPADஐ டைரியாக உபயோகிப்பது மற்றொன்று MATRIX EFFECTS போன்று MS DOS இல் கொண்டுவருவது இவற்றை பற்றி கீழே விரிவாய் பார்ப்போம்.

01. NOTEPAD ஐ டைரியாக உபயோகப்படுத்துவது.
முதலில் START MENU விற்கு சென்று NOTEPAD ஐ திறந்துக்கொள்ளுங்கள்
பின்னர் அதில்:
.LOG என டைப் செய்யவும்
பின்னர் ENTER பட்டனை ஒருமுறை அழுத்தவும். இறுதியாக உங்களுக்கு விருப்பமான பெயரில் SAVE செய்துக்கொள்ளவும். இப்போது நீங்கள் SAVE செய்த NOTEPAD பைலை திறந்து பார்த்தால் அதில் தன்னிச்சையாக நேரம் தேதி போன்றவை காணப்படும். இவ்வாறு நீங்கள் NOTEPAD ஐ திறக்கும் பொழுதெல்லாம் தொடர்ந்து நடைபெறும் என்பதால் இதனை நீங்கள் டைரியாக உபயோகிக்கலாம் அல்லது TIMESHEET ஆகவும் உங்கள் அலுவலகங்களில் பயன்படுத்தலாம்.

02. MATRIX EFFECTS
உங்கள் NOTEPADஐ OPEN செய்துக்கொள்ளுங்கள் இப்பொழுது கீழ் வருவனவற்றை COPY செய்து உங்கள் NOTEPADஇல் PASTE செய்யுங்கள்:

@ECHO OFF
COLOR 02
:START
ECHO %RANDOM% %RANDOM% %RANDOM% %RANDOM% %RANDOM% %RANDOM% %RANDOM% %RANDOM% %RANDOM% %RANDOM%
GOTO START

PASTE பின்னர் MATRIX.BAT என SAVE செய்யுங்கள். இப்பொழுது நீங்கள் SAVE செய்த NOTEPAD பைலை திறந்து பார்த்தீர்களானால் MATRIX EFFECTS போன்று MS-DOS இல் தென்படும்.

மென்பொருள்களுக்கு சீரியல் கீ மற்றும் கிராக் தேட

நீங்கள் பயன்படுத்தும் பல மென்பொருள்களுக்கு சீரியல் கீகள் கிடைக்காமல் DEMO VERSION ஆகவோ TRIAL VERSION ஆகவோ பயன்படுத்திகொண்டிருப்பீர்கள். நீங்கள் பயன்படுத்தும் மென்பொருள்களை FULL VERSION ஆக்க விரும்பினால் அந்த மென்பொருளுக்கு லைசென்ஸ் அல்லது சீரியல் கீ வாங்க வேண்டும், அதற்கு நீங்கள் வாங்க விரும்பும் அந்த மென்பொருள் நிறுவனத்திற்கு ஆயிரக்கணக்கில் பணம் செலுத்த வேண்டும். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு அதற்கு நிச்சயம் வாய்ப்பில்லை, மேலும் நாம் வியாபார நோக்கில் பயன்படுத்தாமல் சொந்த பயனுக்கு மட்டும் அந்த மென்பொருளை பயன்படுத்த விரும்பினால் சில ILLEGAL வலைத்தளங்கள் இலவசமாக பல மென்பொருள்களுக்கு சீரியல் கீகள் வழங்குகின்றன.

சில மென்பொருள்கள் நமக்கு கிடைக்கும் சீரியல் கீகளை ஏற்றுக்கொள்ளாமல் பிரச்சனைகள் செய்யும் அதனையும்’ அடக்க பாட்ச் அல்லது கிராக் பயன்படுத்தி அதனையும் சரி செய்துவிடலாம் அதனையும் இந்த ILLEGAL வலைத்தளங்கள் பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கின்றன. நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளங்களுக்கு செண்டு SEARCH BOX யில் உங்களுக்கு சீரியல் கீ தேவைப்படும் மென்பொருளின் பெயரை மட்டும் குறிப்பிட்டால் போதும். அது ஒரு பட்டியலே தந்துவிடும். அதில் உங்களுக்கான மென்பொருளின் VERSION னை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்.

அவற்றில் சில:
SMART SERIALS
SUPER SERIALS
BEST SERIALS
KEYGEN.US
GREAT CRACKS
SERIALS.WS
SERIALS.BE
SERIAL BAY
CRACKZ.WS

குறிப்பு:
குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளங்களில் 18+ சார்ந்த படங்கள், வீடியோக்கள், வாசகங்கள் பலவும் தென்படுகின்றன ஆகையால் அதனை எதனையும் கிளிக் செய்யாமல் நமக்கு தேவையானவற்றை மட்டும் பதிவிறக்கம் செய்தல் நலம். மேலும் இந்த வலைத்தளங்கள் சில நேரங்களில் வைரஸ் பரப்புவதால் இந்த வலைதளங்களிற்கு செல்வதற்கு முன்னர் உங்கள் கணினியில் ஆண்டி வைரஸ் பதிந்திருத்தல் நலம்.

மறை வெளியீடு:
உங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் பயன்படுத்துவதற்கு மட்டும்.
பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால் எவ்வகையிலும் நானோ இவ்வளைதளமோ பொறுப்பேற்காது.
கல்வியறிவு சார்ந்த பதிவு
(இதில் மென்பொருள் நிறுவனங்களுக்கு நட்டம் ஏற்படுத்தும் நோக்கோடு பதியப்பட்டதல்ல)
இது தவறுதான் இருப்பினும் சொந்த பயனுக்கும் உபயோகித்தல் நலம்..

ட்ரையல் மென்பொருள்களை விரும்பும் காலம் வரை உபயோகிக்க

நம்மில் பெரும்பாலானவர்கள் பல மென்பொருள்களை இலவசமாக உபயோகிப்போம் அல்லது சிலவற்றை க்ராக் அல்லது பாட்ச் செய்து உபயோகிப்போம். சிலவற்றிற்கு க்ராக் கிடைக்க வாய்ப்பில்லாமல் போனால் வேறு வழியின்றி UNINSTALL செய்துவிடுவோம் இருப்பினும் அந்த மென்பொருளை உபயோகிக்க ஆசைப்படுவோம். இது பெரும்பாலும் SHAREWARE மற்றும் TRIALWARE மென்பொருள்களுக்கும் சில ANTIVIRUS, GAMES போன்றவற்றிற்கு பொருந்தும்.

TRIAL PERIOD லேயே ஒரு மென்பொருளை காலம் முழுக்க பயன்படுத்த பல மென்பொருள்கள் உள்ளன அவற்றில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது.

01. RUN AS DATE
02. CRACKLOCK MANAGER

என்பதாகும், இம்மென்பொருள்கள் நீங்கள் விரும்பும் மென்பொருள்களை விரும்பும் காலம் வரை உபயோகிக்க பயன்படுகிறது.

RUN AS DATE
என்பது அளவில் சிறிய இலவச மென்பொருளாகும், இம்மென்பொருள் நீங்கள் குறிப்பிடும் நேரத்தில் அல்லது தேதியில் நீங்கள் இயக்க நினைக்கும் மென்பொருளை இயக்க அனுமதிக்கிறது. இதன் பயன்பாடு உங்கள் கணினியில் உண்மையான நேரத்தை மாற்றாது என்பதால் நீங்கள் தைரியமாக பயன்படுத்தலாம். இம்மென்பொருள் நீங்கள் பயன்படுத்த விரும்பும் மென்பொருளில் மட்டுமே அந்நேரத்தை பொருத்தும் என்பதால் உங்கள் வழக்கமான கணினி வேலைகள் பாதிக்கப்படாது. இம்மென்பொருளை வைத்து ஒரே நேரத்தில் பல மென்பொருள்களை வெவ்வேறான நேரங்களில் இயக்கலாம் என்பது இதன் கூடுதல் சிறப்பு.

பதிவிறக்கம் செய்ய:
DOWNLOAD RUNASDATE
DOWNLOAD RUNASDATE FOR X64

CRACKLOCK MANAGER
என்பது அளவில் சிறிய இலவச மென்பொருளாகும். இம்மென்பொருள் ஒருகாலத்தில் POLYMORPH என்னும் VIRUS னை அழிக்க உருவாக்கப்பட்ட மென்பொருளாகும் POLYMORPH என்னும் வைரஸ் கணினியில் உள்ள அனைத்து மென்பொருள்களையும் SHAREWARE களாக மாற்றிவிடும் தன்மையுடையது, நீங்கள் உண்மையான LICENSE வைத்திருந்தாலும் கூட. ஆகையால் இவ்வைரஸ் பாதித்த கணினிகளில் உள்ள மென்பொருள்கள் அனைத்தும் 30 நாளில் செயலிழந்துவிடும். இதனை தடுக்க பயன்பட்ட ஒரு மென்பொருள்தான் CRACKLOCK MANAGER. ஆனால் இம்மென்பொருள் இன்று LICENSE இல்லாத மென்பொருளுக்கும் நேரத்தை தள்ளிப்போட பயன்படுகிறது.

பதிவிறக்கம் செய்ய:
DOWNLOAD CRACKLOCK

தமிழ் மொழியில் குறுந்தகவல்கள் அனுப்ப/படிக்க

சில மொபைல்களில் தமிழ் எழுத்துக்கள் தெரியாது கட்டம் கட்டமாக [][][][][] தெரியும் காரணம் அதற்கான மொழி வசதி அதில் கட்டமைக்கப்படாததே ஆகும். அதற்கு மாற்றாக உங்கள் மொபைலில் தமிழ் மொழியில் படிக்கவும், எழுவும் ஒரு வழி உள்ளது. அதுதான் INDISMS.
விபரம்

INDISMS
BY: ETERNO INFOTECH

UTILITIES – 0.39 MB
INDISMS இந்திய மொழிகளில் குறுஞ்செய்திகளை (எஸ்.எம்.எஸ்) அனுப்புவதற்கும் மற்றும் பெறுவதற்கும் ஆன ஒரு மொபைல் ஆப் ஆகும். இந்த ஆப் இந்தியாவில் பேசப்படும் ஒன்பது முக்கிய மொழிகளை ஆதரிக்கிறது அவையாவன தமிழ், மராத்தி, பஞ்சாபி, குஜராத்தி, பெங்காலி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி.

முன்னோட்டம் காண WATCH DEMO வினை கிளிக் செய்யுங்கள்:
ஹிந்தியில் காட்டப்படும், இருப்பினும் உபயோகிக்கும் முறை ஒன்றுதான்.

இந்த ஆப்பின் மூலம் தமிழில் படிக்கவும் வந்த குறுந்தகவல்களிற்கு தமிழில் பதில் அனுப்பவும் செய்யலாம் அதற்கான காட்சியமைப்பையும் (USER INTERFACE) இந்த ஆப் வழங்குகிறது இதனை நிறுவிய உடன், REGISTER செய்ய ஒரு வேண்டும். தமிழ் எழுத்துக்களை TYPE செய்ய OPTION-கள் சரியாக கொடுக்கப்படவில்லை. இருப்பினும் SMS-களை தமிழ்மொழியில் எளிமையாக கையாள முடிகிறது. தோழர்களே ஷேர் செய்யுங்கள், பின்னோட்டம் இடுங்கள் அது  நீங்கள் விஜயம் செய்யும் ப்ளாக்கிற்கு நீங்கள் தரும் அங்கீகாரம்/ஊக்குவிப்பதும் ஆகும்.  
நன்றி சொல்ல 15 நொடிகள் போதுமே.
பதிவிறக்கம் செய்ய: CLICK HERE

MOBILE COMPATIBILITY:
N73, N71, E65, N76, N81, N81 8GB, N92, N93, N93i, N95 8GB, N95, 6610 Navigator, 5700 XPRESS MUSIC, E50, E51, E61, E62, E61i, E60, N80, E90, 3250, N91, N91 8GB

6600, 7650, 6682, 6681, 6680, 3230, 6630, 6260, N-GAGE QD, 7610, 6620, 3660, 3620, 3600, 3650, N70, 6670, N72

ஒப்பன் ஆபிஸ் மென்பொருள் ஒரு பார்வை

ஓப்பன் ஆபிஸ் அல்லது திறந்த அலுவலகம் ஒரு அலுவலக பணிகளை செய்யும் அனைத்து மென்பொருளையும் கொண்ட ஒரு தொகுப்பு ஆகும். இதில் செயற்செயலி (வேர்ட் பிராஸஸர்), விரிதாள் (ஸ்பெரட் ஷீட்), தரவுத்தளம் (டேட்டாபேஸ்), காட்சி (பிரசென்டேஷன்) என ஒரு தொகுப்பாக வருகிறது. இந்த ஓப்பன் ஆபிஸின் இன்னொரு சிறப்பு லினக்ஸ், விண்டோஸ் என பல இயக்கத்தளங்களில் நிறுவி பயன்படுத்தி கொள்ளலாம். இது மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் கொண்டுள்ள கோப்பு வடிவங்களையும் கொண்டிருப்பதால், எளிதாக கோப்புகளிடையே பணியாற்றி கொள்ளலாம்.
ஓப்பன் ஆபிஸ் மென்பொருள் பல இயக்கத்தளங்களில் பயன்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயக்கத்தளத்திற்கும் ஏற்றவாறு இது உருவாக்கப்பட்டுள்ளது. இது விண்டோஸ், லினக்ஸ், மேக் மற்றும் சோலாரிஸ் இயக்கத்தளங்களில் இயங்குவது இதன் சிறப்பாகும். மேலும் இது ஓப்பன் டாக்குமென்ட் தரப்படுத்தப்பட்ட கோப்பு முறைமைகளையும் மற்றும் மைக்ரோசாப்ட் ஆபிஸ் 97-2003 கோப்பு வடிவங்களுக்கும் துணைபுரிவது இதன் மற்றொரு சிறப்பாகும். மேலும் இது மைக்ரோசாப்ட் ஆபிஸ் பயன்படுத்தும் பெரும்பாலான கோப்பு வடிவங்களை வாசிக்கவும், திருத்தவும் செய்கிறது. இதில் இன்னொரு விஷயம் மைக்ரோசாப்ட் ஆபிஸின் பழைய பதிப்பு கோப்புகளையும், பழுதடைந்த கோப்புகளையும் இது திறக்கிறது. ஆனால் மைக்ரோசாப்ட் ஆபிஸ் இதனை செய்ய தவறுகிறது என்பதே இதில் வேடிக்கையாகும்.
 
பதிவிறக்கம் செய்ய: CLICK HERE
நன்றி: WIKIPEDIA

NOTEPAD மென்பொருளுக்கு மாற்று

NOTEPAD ++

NOTEPAD ++ என்பது விண்டோஸ் NOTEPAD மென்பொருளுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட ஒரு பொது நிரலாக்க மென்பொருள் ஆகும். இதில் MULTIPLE TAB அம்சம் உள்ளதால் ஒரே நேரத்தில் பல கோப்புகளை கையாள முடியும். மேலும் இம்மென்போருளில் குறிப்பிட்ட 50 நிரலாக்க மொழிகளை ( PROGRAMMING, SCRIPTING, AND MARKUP LANGUAGES உட்பட) இதில் நாம் பயன்படுத்தியும் தொகுத்தும் கொள்ளலாம். அளவிலும் சிறியது, உபயோகிப்பதற்கும் எளிதானது.

இம்மென்பொருள் ஆதரவளிக்கும் நிரலாக்க மொழிகளுள் சில:
ACTIONSCRIPT, ADA, ASP, ASSEMBLY, AUTOIT
BATCH
C, C++, C#, CAML, CMAKE, COBOL, CSS
D, DIFF
FLASH ACTIONSCRIPT, FORTRAN
GUI4CLI
HASKELL, HTML
INI FILE, INNOSETUP
JAVA, JAVASCRIPT, JSP
KIXTART
LISP, LUA
MAKEFILE, MATLAB, MS-DOS
NSIS
OBJECTIVE-C
PASCAL, PERL, PHP, POSTSCRIPT, POWERSHELL, PROPERTIES FILE, PYTHON
R, RESOURCE FILE, RUBY
SHELL, SCHEME, SMALLTALK, SQL
TCL, TEX
VISUAL BASIC, VHDL, VERILOG
XML
YAML

சிறப்பம்சங்கள்:
TABBED DOCUMENT INTERFACE
DRAG-AND-DROP
MULTIPLE CLIPBOARDS (PLUGIN REQUIRED)
SPLIT SCREEN EDITING AND SYNCHRONIZED SCROLLING
SPELL CHECKER
FIND AND REPLACE OVER MULTIPLE DOCUMENTS
FILE COMPARISON
ZOOMING
உங்கள் கணினியில் இருக்க வேண்டிய மென்பொருள்.
பதிவிறக்கம் செய்ய: CLICK HERE