மென்பொருள்களுக்கு சீரியல் கீ மற்றும் கிராக் தேட

நீங்கள் பயன்படுத்தும் பல மென்பொருள்களுக்கு சீரியல் கீகள் கிடைக்காமல் DEMO VERSION ஆகவோ TRIAL VERSION ஆகவோ பயன்படுத்திகொண்டிருப்பீர்கள். நீங்கள் பயன்படுத்தும் மென்பொருள்களை FULL VERSION ஆக்க விரும்பினால் அந்த மென்பொருளுக்கு லைசென்ஸ் அல்லது சீரியல் கீ வாங்க வேண்டும், அதற்கு நீங்கள் வாங்க விரும்பும் அந்த மென்பொருள் நிறுவனத்திற்கு ஆயிரக்கணக்கில் பணம் செலுத்த வேண்டும். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு அதற்கு நிச்சயம் வாய்ப்பில்லை, மேலும் நாம் வியாபார நோக்கில் பயன்படுத்தாமல் சொந்த பயனுக்கு மட்டும் அந்த மென்பொருளை பயன்படுத்த விரும்பினால் சில ILLEGAL வலைத்தளங்கள் இலவசமாக பல மென்பொருள்களுக்கு சீரியல் கீகள் வழங்குகின்றன.

சில மென்பொருள்கள் நமக்கு கிடைக்கும் சீரியல் கீகளை ஏற்றுக்கொள்ளாமல் பிரச்சனைகள் செய்யும் அதனையும்’ அடக்க பாட்ச் அல்லது கிராக் பயன்படுத்தி அதனையும் சரி செய்துவிடலாம் அதனையும் இந்த ILLEGAL வலைத்தளங்கள் பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கின்றன. நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளங்களுக்கு செண்டு SEARCH BOX யில் உங்களுக்கு சீரியல் கீ தேவைப்படும் மென்பொருளின் பெயரை மட்டும் குறிப்பிட்டால் போதும். அது ஒரு பட்டியலே தந்துவிடும். அதில் உங்களுக்கான மென்பொருளின் VERSION னை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்.

அவற்றில் சில:
SMART SERIALS
SUPER SERIALS
BEST SERIALS
KEYGEN.US
GREAT CRACKS
SERIALS.WS
SERIALS.BE
SERIAL BAY
CRACKZ.WS

குறிப்பு:
குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளங்களில் 18+ சார்ந்த படங்கள், வீடியோக்கள், வாசகங்கள் பலவும் தென்படுகின்றன ஆகையால் அதனை எதனையும் கிளிக் செய்யாமல் நமக்கு தேவையானவற்றை மட்டும் பதிவிறக்கம் செய்தல் நலம். மேலும் இந்த வலைத்தளங்கள் சில நேரங்களில் வைரஸ் பரப்புவதால் இந்த வலைதளங்களிற்கு செல்வதற்கு முன்னர் உங்கள் கணினியில் ஆண்டி வைரஸ் பதிந்திருத்தல் நலம்.

மறை வெளியீடு:
உங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் பயன்படுத்துவதற்கு மட்டும்.
பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால் எவ்வகையிலும் நானோ இவ்வளைதளமோ பொறுப்பேற்காது.
கல்வியறிவு சார்ந்த பதிவு
(இதில் மென்பொருள் நிறுவனங்களுக்கு நட்டம் ஏற்படுத்தும் நோக்கோடு பதியப்பட்டதல்ல)
இது தவறுதான் இருப்பினும் சொந்த பயனுக்கும் உபயோகித்தல் நலம்..

Advertisements

நிலநடுக்கம் மற்றும் சுனாமி பாதுகாப்புக் குறிப்புக்கள்

நிலநடுக்கம் என தெரிந்தவுடன் நீங்களும் பயப்படாதீர்கள் மற்றவர்களையும் பயத்தில் ஆழ்த்தாதீர்கள் மாறாக உடனே திட்டமிட ஆரம்பியுங்கள்.
01. வீட்டில் உள்ள கேஸ் மற்றும் தண்ணீர் ஊற்றுகளை அடைத்துவிடுங்கள்.
02. முதலில் உயிர்வாழ தேவையான பொருள்களை சேகரியுங்கள்.

குறிப்பாக நீங்கள் சேகரிக்க வேண்டியது:
01. பதப்படுத்தப்பட்ட உணவுகள்,
02. முதலுதவி பெட்டி அல்லது கிட்,
03. நபருக்கு மூன்று தண்ணீர் கேலன்கள் (11.4 லிட்டர்)
04. தூசியில் இருந்து உங்களை காக்க முகமூடிகள் மற்றும் கண்ணாடிகள்.
05. பேட்டரியால் இயங்கும் வானொலி மற்றும் ஒளிரும் விளக்குகள்.
06. பாதுகாப்பிற்கு புதிய அல்லது சார்ஜ் ஏற்றப்பட்ட பேட்டரிகள்.
07. முக்கியமான ஆவணங்கள், கோப்புகள், சான்றிதழ்கள், பத்திரங்கள் போன்றவற்றை பாதுகாப்பாக உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள் அல்லது நீங்கள் எது பாதுகாப்பான வழிமுறை எனக் கருதுகிறீர்களோ அந்த வழிமுறையையும் பின்பற்றுங்கள்.

03. ஒருவேளை நெரிசலில் உறவுகளை பிரியும் நிலை ஏற்படாலாம்.  ஆகையால் முன்பே திட்டமிட்டு நீங்கள் குறிப்பிட்டுள்ள பாதுகாப்பான இடத்தில் அனைவரும் வந்து சேர்வதைப்போல தயார்படுத்திக்கொள்ளுங்கள்.

04. நீங்கள் இரவில் படுக்கையில் இருக்கும்பொழுது பூகம்பம் ஏற்பட்டால், வெளியில் ஓடி வந்துவிடுங்கள் முடியாதப் பட்சத்தில் உடனே உங்கள் வீட்டில் உள்ள கட்டிலுக்கு அடியிலோ அல்லது மேஜையின் அடியிலோ சென்று ஒளிந்துக்கொளுங்கள் மேலும் பாதுகாப்பிற்கு தலையணையை வைத்து உங்கள் தலையை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

05. மாடி வீட்டில் இருந்தால் லிப்ட் உபயோகப்படுத்தாதீர்கள்.

06. மரச்சாமான்கள், அலமாரிகள் கண்ணாடிகள் போன்ற எளிதில் சாயும் பொருட்களிடமிருந்து இருந்து விலகியே இருங்கள்.

07. நீங்கள் வெளியில் நடந்துக்கொண்டோ, காரிலோ அல்லது பைக்கிலோ பயணம் செய்துக்கொண்டிருந்தால் உடனே கட்டிடங்கள், மின் இணைப்புகள், மரங்கள்  இல்லாத பாதுகாப்பான  இடத்திற்கு நிதானமாக சென்றுவிடுங்கள் மேலும் நீங்கள் செல்லும் இடத்தை உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துவிடுங்கள் அவர்களையும் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்துங்கள். (உங்கள் அருகாமையில் இவ்வாறான இடங்கள் இருந்தால்அவ்விடம் நோக்கி நகர்த்தல் நலம்).

08. நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 8.0 + தாண்டிவிட்டாலே சுனாமியை பற்றி சிந்திக்க ஆரம்பித்துவிடுங்கள் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ எச்சரிக்கைக்காக காத்திருக்காதீர்கள்.

09. அலுவலகம், பள்ளி, கல்லூரி, ஹோட்டல் என எங்கு இருந்தாலும் சரி அல்லது முக்கியமான வேலையாக இருந்தாலும் சரி முதலில் வெளியேறிவிடுங்கள்.

10. கடலில் இருந்து குறைந்தபட்சம் 30 கிலோமீட்டராவது தள்ளி இருங்கள்.
அல்லது அவ்வாறு செய்ய முடியாவிட்டால் உயரமான இடத்தை நோக்கி நகருங்கள் குறிப்பாக
01.உயந்த மலைகள்,
02. உயர்ந்த மேடுகள்,
03. உயர்ந்த கம்பீரமான, உறுதியான கட்டிடத்தின் மேல் தளத்திற்கு சென்றுவிடுங்கள்.
04. நன்றாக வேரூன்றிய, திடமான ஒரு மரத்தில் ஏறி அதனை நன்றாகப் பற்றிக்கொள்ளுங்கள்.

11. முதலில் நன்றாக நீந்தப் பலகிக்கொள்ளுங்கள்.

குறிப்பு: 

01. முடிந்தவரை நீங்கள் அறிந்தும், அறியாமல் செய்த பாவங்களுக்கு இறைவனிடம் மனமுருக மன்னிப்பு கேளுங்கள்.
02. கூட்டத்தோடு இருந்தால் கூட்டு வழிபாடு நடத்துங்கள், அது தேவையில்லாத அச்சத்தை போக்கும், மேலும் இறை நம்பிக்கையானது நம்மை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நம்மை நிச்சயம் பாதுகாக்கும்.
03. இயற்கை அன்னையிடமும், கடல் அன்னையிடமும், பஞ்ச பூதங்களிடமும், பூமித் தாயிடமும் தங்களை மன்னித்து காத்தருளும்படி வேண்டிக்கொள்ளுங்கள்.
04. ஆபத்தில் இருப்பவர்களை முடிந்தமட்டும் காப்பாற்றுங்கள்.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் நேஷனல் ஜியோகிராபிக் சானல் உள்ளிட்ட பல தலைச்சிறந்த வலைதளங்களில் இருந்து திரட்டப்பட்டது.

ட்ரையல் மென்பொருள்களை விரும்பும் காலம் வரை உபயோகிக்க

நம்மில் பெரும்பாலானவர்கள் பல மென்பொருள்களை இலவசமாக உபயோகிப்போம் அல்லது சிலவற்றை க்ராக் அல்லது பாட்ச் செய்து உபயோகிப்போம். சிலவற்றிற்கு க்ராக் கிடைக்க வாய்ப்பில்லாமல் போனால் வேறு வழியின்றி UNINSTALL செய்துவிடுவோம் இருப்பினும் அந்த மென்பொருளை உபயோகிக்க ஆசைப்படுவோம். இது பெரும்பாலும் SHAREWARE மற்றும் TRIALWARE மென்பொருள்களுக்கும் சில ANTIVIRUS, GAMES போன்றவற்றிற்கு பொருந்தும்.

TRIAL PERIOD லேயே ஒரு மென்பொருளை காலம் முழுக்க பயன்படுத்த பல மென்பொருள்கள் உள்ளன அவற்றில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது.

01. RUN AS DATE
02. CRACKLOCK MANAGER

என்பதாகும், இம்மென்பொருள்கள் நீங்கள் விரும்பும் மென்பொருள்களை விரும்பும் காலம் வரை உபயோகிக்க பயன்படுகிறது.

RUN AS DATE
என்பது அளவில் சிறிய இலவச மென்பொருளாகும், இம்மென்பொருள் நீங்கள் குறிப்பிடும் நேரத்தில் அல்லது தேதியில் நீங்கள் இயக்க நினைக்கும் மென்பொருளை இயக்க அனுமதிக்கிறது. இதன் பயன்பாடு உங்கள் கணினியில் உண்மையான நேரத்தை மாற்றாது என்பதால் நீங்கள் தைரியமாக பயன்படுத்தலாம். இம்மென்பொருள் நீங்கள் பயன்படுத்த விரும்பும் மென்பொருளில் மட்டுமே அந்நேரத்தை பொருத்தும் என்பதால் உங்கள் வழக்கமான கணினி வேலைகள் பாதிக்கப்படாது. இம்மென்பொருளை வைத்து ஒரே நேரத்தில் பல மென்பொருள்களை வெவ்வேறான நேரங்களில் இயக்கலாம் என்பது இதன் கூடுதல் சிறப்பு.

பதிவிறக்கம் செய்ய:
DOWNLOAD RUNASDATE
DOWNLOAD RUNASDATE FOR X64

CRACKLOCK MANAGER
என்பது அளவில் சிறிய இலவச மென்பொருளாகும். இம்மென்பொருள் ஒருகாலத்தில் POLYMORPH என்னும் VIRUS னை அழிக்க உருவாக்கப்பட்ட மென்பொருளாகும் POLYMORPH என்னும் வைரஸ் கணினியில் உள்ள அனைத்து மென்பொருள்களையும் SHAREWARE களாக மாற்றிவிடும் தன்மையுடையது, நீங்கள் உண்மையான LICENSE வைத்திருந்தாலும் கூட. ஆகையால் இவ்வைரஸ் பாதித்த கணினிகளில் உள்ள மென்பொருள்கள் அனைத்தும் 30 நாளில் செயலிழந்துவிடும். இதனை தடுக்க பயன்பட்ட ஒரு மென்பொருள்தான் CRACKLOCK MANAGER. ஆனால் இம்மென்பொருள் இன்று LICENSE இல்லாத மென்பொருளுக்கும் நேரத்தை தள்ளிப்போட பயன்படுகிறது.

பதிவிறக்கம் செய்ய:
DOWNLOAD CRACKLOCK