ஸ்போக்கன் இங்கிலீஷ் முன்னுரை

ஆங்கிலம் கற்றுக்கொள்வது என்பது சற்று சிரமம் தான் ஆனாலும் பழக பழக தானாகவே வந்துவிடும், நீங்கள் ஓரளவிற்கு ஆங்கிலம் பேசுவீர்களா, உங்களால் மற்றவர்கள் பேசுவதை புரிந்துக்கொள்ள முடிகிறது ஆனால் இலக்கண பிழை ஏற்பட்டுவிடும் என்பதால் பேசுவதை தவிர்த்து விடுகிறீர்களா, உண்மையில் இலக்கண பிழை மட்டும் அதற்கு காரணமல்ல உங்களுக்கு VOCABULARY அதாவது ஆங்கில வார்த்தைகள் நிறைய தெரியாமல் இருப்பதும் முக்கிய காரணம், பெரும்பாலும் ஆங்கிலத்தில் பேசுபவர்கள் இலக்கண ரீதியாய் பேசுவதில்லை, வெறும் WORDS அதாவது வார்த்தை பொருள்களை மட்டுமே வைத்து வார்த்தை ஜாலம் காட்டுகின்றனர், அதுவும் ஒரு வகையில் சரிதான் ஏனெனில் மொழிப் பேசுவது என்பது முக்கியமல்ல நீங்கள் பேசுவது மற்றவர்களால் புரிந்துக்கொள்ள முடிகிறதா அதுதான் முக்கியம். இதனை ஆங்கிலத்தில் EFFECTIVE COMMUNICATION என்று கூறுவார்கள்.

முதலில் ஆங்கிலம் கற்க பொறுமை மிக அவசியம் மேலும் ஆங்கிலம் பற்றிய அடிப்படை சிறிதளவு தெரிந்திருந்தால் போதுமானது நீங்களும் செம்மொழியில் பெசுவதைபோல ஆங்கிலத்திலும் கலக்கலாம். இனி அடுத்த பதிவில் ஆங்கிலம் பற்றிய அடிப்படை விஷயங்களை பார்ப்போம்.

  அதுவரை நீங்கள் ஆங்கிலத்தில் கற்றுத்கொள்ள சில குறிப்புகள்:
01. பெரும்பாலும் ஆங்கில சானல்களை பாருங்கள், அதில் வரும் SUBTITLES களை பாருங்கள் மேலும் அவர்களின் உச்சரிப்புகளையும் நன்றாக கவனியுங்கள். தமிழ் படம் பார்ப்பீர்கள் என்றால் கூடுதல் வசதி அனைத்து ஒரிஜினல் சி.டிகளிலும் SUBTITLES கொடுக்கப்பட்டிருக்கும் அதனையும் கவனியுங்கள் புது புது வார்த்தைகள் உங்களால் கற்றுக்கொள்ளமுடியும்.

02.நண்பர்களிடம், பெற்றோர்களிடம், கூடப்பிறந்தவர்களிடம் ஆங்கிலத்திலேயே உரையாடுங்கள் முதலில் நகைத்தாலும் பிறகு ஏற்றுக்கொள்வார்கள். அது உங்கள் மனவுறுதியை பொருத்து உள்ளது.

03. பேசுவதற்கு யாரும் கிடைக்கவில்லையா முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்துக்கொள்ளுங்கள் கேள்வி பதில் பாணியில் நீங்களே பேசிக்கொள்ளுங்கள் (எனக்கு பிடித்தமான செயல்).

04. குழந்தைகளுக்கான ஆங்கில கதைப் புத்தகங்களை வாங்கி படியுங்கள் அதில் உள்ள STANDARD ENGLISH நீங்கள் புரிந்துக்கொள்ளும் வண்ணம் எளிதாய் இருக்கும் அதன் பின்னர் நாவல்கள், செய்தித்தாள்கள் என படிக்க ஆரம்பியுங்கள்.

05. உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் எனில் தயங்காமல் கஸ்டமர் கேரை தொடர்புக்கொண்டு ஆங்கிலத்தில் உரையாடுங்கள்.

06. நண்பர்களிடத்தில் ஆங்கிலத்தில் CHAT செய்யுங்கள் இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் யோசிக்கவும் நேரம் கிடைக்கும் மேலும் பழக பழக ஆங்கில புலமையும் வேகமாக வரும்.

07.நீங்கள் பேசும்போது தமிழிலில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிப்பெயர்க்காதீர்கள் அதுதான் நீங்கள் பேசத் தடுமாருவதற்கு முக்கிய காரணம் தமிழை எப்படி யோசிக்காமல் பேசுகிரீர்களோ அதேபோல் ஆங்கிலத்தையும் பேசுங்கள் தவறாய் இருந்தாலும் சரி அதை பற்றி கவலைப்படாதீர்கள். சைக்கிள் ஒட்டும்போழுது எத்தனை முறை விழுந்திருப்பீர்கள் அடிவாங்க அடிவாங்கத்தானே சரியாக ஓட்ட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அதேப்போல் தான் ஆங்கிலமும்.

கடைசியில் உங்களால் நிச்சயம் பேச முடியும் ஏனெனில் நீங்கள் தமிழர்கள் காரணம் தமிழில் மொத்தம்: 247 எழுத்துக்கள், 50,000+ வார்த்தைகள் இவையனைத்தையும் சாவகாசமாக பேசும் நீங்கள். வெறும் 26 எழுத்துக்கள் பேச 1500 வார்த்தைகள் கொண்ட ஆங்கிலத்தை பேச முடியாதா என்ன.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s