புத்தரின் பொன்மொழிகள்

புத்தர் என்றுமே தன்னை ஒரு தேவன் என்றோ, கடவுளின் [அவதாரம்] என்றோ கூறிக்கொண்டதில்லை. தான் புத்த நிலையை அடைந்த ஒரு மனிதன் என்பதையும், புவியில் பிறந்த மானிடர் அனைவருமே இந்த புத்த நிலையை அடைய முடியும் என்பதையும் தெளிவாக வலியுறுத்தினார். ஆசையே துன்பத்தின் அடிப்படை என அவர் கூறினார். அத்தகைய மகானின் பொன்மொழிகள் கீழே உங்கள் பார்வைக்கு.

❉ உலக வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே ஆகும்.

❉ ஒன்றும் தெரியாது என்று நினைப்பவனுக்கு கொஞ்சமாவது அறிவு உண்டு. ஆனால், எல்லாம் தெரியும் என்று நினைப்பவன் முழு மூடன்.

❉ நம் எண்ணங்கள் யாவும், பிறருக்கு எந்த வகையிலும் துன்பம் தருவதாக இருக்கக்கூடாது. பிறருக்கு நன்மையையும் ஆறுதலையும் தரக்கூடியதாக இருக்கவேண்டும்.

❉ அறிஞன் விழிப்படைந்து தன் வாழ்வில் கருத்துடனும் ஒழுக்கத்துடனும் வாழ்ந்து, வெள்ளத்தால் சேதம் அடையாத ஒரு தீவைப்போல தன்னைப் பலப்படுத்திக்கொள்கிறான்.

❉ ஒருவன் என்ன செயல் செய்கிறானோ, அதுவாகவே அவன் ஆகிவிடுகிறான். ஆதலால், ஒவ்வொருவனும் தன்னைத்தானே உருவாக்கிக்கொள்கிறான். ஆகவே, நம் செயல்களிலிருந்து நாம் தப்பிக்க முடியாது.

❉ ஒருவனுக்கு அவனேதான் தலைவனாக இருக்க முடியும். வேறு ஒருவன் அவனுக்குத் தலைவனாக இருக்க முடியாது. தன்னைத் தானே அடக்கி கட்டுப்படுத்தத் தெரிந்த மனிதனே பெறுதற்கரிய தலைமையைப் பெற முடியும்.

❉ கையில் புண் இல்லையென்றால் ஒருவன் தன் கையில் நஞ்சையும் எடுக்கலாம். நஞ்சு அவனைப் பாதிப்பதில்லை. அதுபோல தீங்கு செய்யாத ஒருவனுக்குத் தீங்கு நேர்வதில்லை.

❉ ஆகாயத்திற்குச் சென்றாலும், நடுக் கடலுக்குச் சென்றாலும், மலையின் இடுக்கில் மறைந்துகொண்டாலும், எங்கு சென்று ஒளிந்துகொண்டாலும், தீய செயலைச் செய்தவர் அதன் விளைவுக்குத் தப்பவே முடியாது.

❉ எந்தச் செயலையும் நன்கு ஆராய்ந்து, எது நன்மைக்கு உகந்தது என்று காண்கிறீர்களோ, அதையே நம்பி உறுதியாகப் பற்றுங்கள்.

❉ பகையைத் தீர்ப்பது நட்பு ஒன்றுதான். அமைதிக்கான உறுதியும் அதுவே.

❉ உறுதி மிக்க பாறை புயல்காற்றில் அசைவதில்லை.அது போல் அறிவாளிகள் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் மனம் மயங்குவதில்லை

❉ உடல் நோயைக் கூட நம்மால் தாங்கிக் கொள்ள முடியும்.
ஆனால் மன நோயை தாங்கி கொள்ள முடியாது.

❉ தீமையை நன்மையால் வெல்லுங்கள்,
பொய்யினை உண்மையால் வெல்லுங்கள்

❉ தனக்கு எல்லாம் தெரியும் என இறுமாப்போடு திரிபவன் முட்டாள்.
அந்த முட்டாள்தனமே அவனை படு பாதாளத்தில் தள்ளி விடும் .

❉ அறியாமையோடு நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும்
அறிவுடன் ஒருநாள் வாழ்வது மேலானது.

❉ நாம் அனைவரும் உண்மையானவர்களாகத் திகழ்வோமாக. லட்சியத்தை நம்மால் பின்பற்ற முடியவில்லை என்றால், நமது பலவீனத்தை நாம் ஒப்புக் கொள்வோம். லட்சியத்தை நாம் இழிவுபடுத்தாமல் இருக்க வேண்டும். லட்சியத்தைத் தாழ்ந்த நிலைமைக்குக் கொண்டு செல்ல எவரும் வேண்டாம்.

❉ முன்னேறிக்கொண்டே இரு ! முறையற்ற ஒரு செயலைச் செய்து விட்டதாக நினைத்தாலும், அதற்காக நீ திரும்பிப் பார்க்க வேண்டாம். அவை போன்ற தவறுகளை முன்பு செய்யாமல் இருந்திருந்தால்; இன்று நீ இருக்கும் நிலையை அடைந்திருக்க முடியும் என்று இப்போது நம்புகிறாயா? அந்தத் தவறுகளே தான் நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாகும். உன் நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதைக் குறித்து கவலைப்பட வேண்டாம். லட்சியத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு முன்னேறியபடியே இரு!

❉ மனிதன் தீய எண்ணத்தோடு பேசினாலும்,
செயல் புரிந்தாலும் வண்டிச்சக்கரம் மாட்டைத் தொடர்ந்து செல்வதுபோல துக்கம் அவனைத் தொடர்ந்து செல்லும்.

❉ துன்பம் இத்தகையது என்று உணர்ந்தால்,
நாம் துன்பப்படுவோர் அனைவரையும் நம் சகோதரர்களாகப் பாவிப்போம். தன் பகைவனால் ஏற்படும் துன்பத்தைக் காட்டிலும், தன்னை வெறுப்பவனால் ஏற்படும் துன்பத்தைக் காட்டிலும், அடக்கம் இல்லாத மனம் ஒருவனுக்கு அதிகத் துன்பத்தைத் தருகிறது.

❉ சம்சார யாத்திரையை முடித்துக் கொண்டவனுக்கு,
அனைத்து துக்கத்திலிருந்து நீங்கியவனுக்கு, பற்றுக்களிலிருந்து விடுதலை பெற்றவனுக்கு எல்லா விலங்குகளையும் உடைத்தெறிந்தவனுக்கு துன்பம் ஏற்படுவதில்லை.

❉ எதிலும் ஆசை வேண்டாம். ஆசைப்பட்ட பொருளை இழப்பது துன்பம்தான். ஆசையும் பொருளும் அற்றவனுக்கு விலங்குகள் இல்லை.

❉ கோபத்தை கைவிடு. செருக்கை கைவிடு. உலகப் பற்றுக்கள் அனைத்தையும் ஒழி. எதையும் தனது என்று நினையாதவனுக்குத் துன்பங்கள் ஏற்படுவதில்லை.

❉ பிரியம் உள்ளவரைக் காண்பதும்,
பிரியம் இல்லாதவரைக் காண்பதும் வேதனை தரும்.

❉ துன்பத்தை அழிக்கத் தூய வாழ்க்கை வாழுங்கள். உன் துன்பத்திற்கு எது காரணமாய் இருந்தாலும் இன்னொருவரைப் புண்படுத்தாதே.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s