சிற‌ந்த பொ‌ன்மொ‌ழிகள் பாகம் ஒன்று

ம‌னித‌ர்க‌ள் ம‌னித‌ர்களாக வா‌ழ பல ‌சிற‌ந்த பொ‌ன்மொ‌ழிகளை மகா‌ன்களு‌ம், அ‌றி‌ந்தவ‌ர்களு‌‌ம் கூ‌றியு‌‌ள்ளன‌ர். அவ‌ற்றை படி‌த்து அத‌ன்படி வா‌ழ்‌‌ந்து கா‌ட்டுவோ‌ம்.

❉ அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.
:- கன்பூசியஸ்

❉ அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக்கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.
:- எமர்சன்

❉ கடிகாரத்தில் நேரத்தைப் பார்க்காமல் கடினமாக உழைத்ததால்தான் என்னால் புதிய பொருட்களைக் கண்டுபிடிக்க முடிந்தது
:- தாமஸ் ஆல்வா எடிசன்

❉ சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்
:- செனாக்கா

❉ உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.
:- ஜார்ஜ்

❉ நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது.
:- கார்ல் மார்க்ஸ்

❉ கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.
:- ஜி. டி. நாயுடு

❉ செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.
:- சபாகிளிஸ்

❉ கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை,
எல்லையற்ற பேராசை இந்தமூன்றும் மனிதனை நாசமாக்கிவிடும்,
:- முகமதுநபி

❉ இறைவன் மனிதர்களுக்குச் சிறிதும் அநீதி இழைப்பதில்லை. ஆனால் மனிதர்கள்தான் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்.
:- நபிகள் நாயகம்

❉ வாழ்க்கையில் வெற்றி பெற மூன்று வழிகள் உள்ளன. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள். பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள், பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
:- வில்லியம் ஷேக்ஸ்பியர்

❉ எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது
:- ஆப்ரகாம் லிங்கன்

❉ நல்லவனுக்கு நலம் நடக்கும் என மட்டும் நம்பாது வல்லவனாயும் வாழ்ந்துவிடு பாப்பா
:- பாரதியார்

❉ பெண்களை ஆண்கள் காவல் புரிவதால் பெண்மை தாழ்ந்ததன்று. வன்மை இரும்புப்பெட்டி மென்மை தங்கத்தை காப்பாற்றுகிறது. தங்கம் தாழ்ந்ததென உலகம் கருதுகிறதா?
:- வாரியார்

குறிப்பு: இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் பொன்மொழிகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வலைத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இதில் திருடும் நோக்கமோ, நகலெடுக்கும் நோக்கத்துடனோ பதியப்பட்டது அல்ல.
நன்றி: http://www.www.penmai.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s